BJP leader arrested in madurai

மதுரை மாவட்டம் பி.பி.குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (23). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவை சரவணப்பட்டியில் தங்கியிருந்தார். அப்போது, தனது இடுப்பில் கத்தி வைத்து எடுப்பது போல் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல், அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரைக் கொண்டாடி வந்தனர். அதே வேளையில், ஸ்ரீகாந்த் பதிவிட்டிருந்த வீடியோவை இணையப் பக்கத்தில் பதிவிட்டும் வந்தனர். இதனால், அவரது வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

Advertisment

இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர், அவரைத்தொடர்புகொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.