
ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி, ஒன்பது லட்சம் ரூபாய் பறித்த விருதுநகர் மாவட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவராக உள்ளவர் பாண்டியன். இவர் தனது இரு மகன்களுக்கும் ரயில்வே துறையில் வேலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் என்பவரிடம் 11 லட்சம் ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் இருவரிடமும் கொடுத்த பணத்தை பாண்டியன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இறுதியில் இரண்டு லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்த நிலையில் மீதிபணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாகப் பாண்டியன் காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்ட பாஜக செயலாளரான கலையரசனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு நபரான சுரேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)