ADVERTISEMENT

"தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்"- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

10:04 PM Jul 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று (21/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பெருந்தொற்றில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு தேர்ச்சியை எதிர்நோக்கி இருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு முதலில் அறிவித்தது. அதைப் பின் தொடர்ந்து, தமிழக அரசும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்று அறிவித்தது. அதைப் பின் தொடர்ந்து, அவர்களின் 10- ஆம் வகுப்பு, 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால் 1,50,000 மாணவர்கள் தனித்தேர்வர்களாக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அதோடு அவர்களுக்கான தேர்வையும் அக்டோபர் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள். அக்டோபரில் தேர்வு பின்னர் நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் வந்தால் எப்போது அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேருவார்கள் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். அதோடு தனித்தேர்வர்களின் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு 10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கானத் தேர்ச்சியை முன் கூட்டியே ஆல்பாஸ் என அறிவித்து அவர்களுக்கும் முறையான மதிப்பெண் வழங்கப்பட்டால் அந்த மாணவர்களும் கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக இருக்கும். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT