BJP JP Natta arrives in Madurai

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், 2 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தற்பொழுது மதுரை வந்துள்ளார்.

Advertisment

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அவரைதமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.இன்று (30.01.2021) மாலை மதுரையில் நடைபெறும் முதல் பொதுக்கூட்ட மேடையில் நட்டா கலந்துகொள்ளவுள்ளார்.நாளை காலை புதுச்சேரி செல்லும் அவர், பாரதியார் சிலைக்குமாலை அணிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.