Advertisment

பா.ஜ.க கொடியைக் காட்டி அரசு பஸ்சை கல் வீசி தாக்கிய மர்ம ஆசாமி!

bjp incident in nagerkoil

Advertisment

திருத்தணியில்தொடங்கி திருச்செந்தூாில் முடிய இருந்த பாஜகவினாின் வேல் யாத்திரைக்கு, தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் பாஜகவினா் அந்த தடையை மீறி யாத்திரையை நடந்த முயன்றதால், அவா்கள் கைது செய்யப்பட்டனா். இந்தநிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முமுவதும் பாஜகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவா்களையும் போலீசாா் கைது செய்து வருகின்றனா். மேலும் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக மாவட்டம் தோறும் பா.ஜ.க முக்கிய நிா்வாகிகளையும் கைது செய்தனர்.

bjp incident in nagerkoil

இந்தநிலையில், நாகா்கோவிலிலும் கலெக்டா் அலுவலகம் முன் பாஜகவினா் மறியல் போராட்டம் நடத்தியதில், 573 போ் கைது செய்யப்பட்டனா். இதில், போலீசுக்கும் பாஜகவினருக்குமிடையேள்ளுமுள்ளு நடத்தது. இதில் டி.எஸ்.பி வேணுகோபாலின் கையில் இருந்த மைக் உடைந்தது. இந்த நிலையில், மாலையில் அருமநல்லூாில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டியிருந்த அரசு பஸ்சை, புத்தோி மேம்பாலத்தில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம ஆசாமிஒருவர்,பா.ஜ.க கொடியைக் காட்டி பஸ்சை நிறுத்த முயன்றாா்.

Advertisment

அப்போது பஸ் டிரைவா் பஸ்சை நிறுத்தாததால் அந்த மா்ம ஆசாமி கையில் இருந்த கற்களை பஸ்சின் முன் கண்ணாடியில் வீசி தாக்கினாா். இதில் கண்ணாடி முழுவதும் உடைந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டமாக இருந்தும் யாரும் காயம் அடையவில்லை. மேலும் அந்த ஆசாமி கையில் இருந்த பா.ஜ.க கொடியை பஸ்சின் அருகில் மடக்கி எறிந்து தப்பிச் சென்றாா்.

bjp incident in nagerkoil

சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா் பா.ஜ.க கொடியைக் கைப்பற்றி, பஸ்சை உடைத்த ஆசாமியைத் தேடிவருகின்றனா். பஸ்சை உடைத்தது பாஜகவை சோ்ந்தவரா? அல்லது பா.ஜ.கவினா் மீது பழிபோட வேறுயாராவது பாஜக கொடியைக் காட்டி பஸ்சை உடைத்தாா்களா? என்ற கோணத்தில் விசாாித்து வருகின்றனா். இதில், பா.ஜ.க மாவட்ட தலைவர்தர்மராஜன் பஸ்சை பாஜகவினா் யாரும் உடைக்கவில்லை என்றும் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த நபா்கள் தான் உடைத்து இருக்கிறாா்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளாா்.

police nagerkovil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe