Skip to main content

பா.ஜ.க கொடியைக் காட்டி அரசு பஸ்சை கல் வீசி தாக்கிய மர்ம ஆசாமி!

Published on 07/11/2020 | Edited on 08/11/2020

 

bjp incident in nagerkoil

 

திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூாில் முடிய இருந்த பாஜகவினாின் வேல் யாத்திரைக்கு, தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் பாஜகவினா் அந்த தடையை மீறி யாத்திரையை நடந்த முயன்றதால், அவா்கள் கைது செய்யப்பட்டனா். இந்தநிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முமுவதும் பாஜகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவா்களையும் போலீசாா் கைது செய்து வருகின்றனா். மேலும் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக மாவட்டம் தோறும் பா.ஜ.க முக்கிய நிா்வாகிகளையும் கைது செய்தனர்.

 

bjp incident in nagerkoil


இந்தநிலையில், நாகா்கோவிலிலும் கலெக்டா் அலுவலகம் முன் பாஜகவினா் மறியல் போராட்டம் நடத்தியதில், 573 போ் கைது செய்யப்பட்டனா். இதில், போலீசுக்கும் பாஜகவினருக்குமிடையேள்ளுமுள்ளு நடத்தது. இதில் டி.எஸ்.பி வேணுகோபாலின் கையில் இருந்த மைக் உடைந்தது. இந்த நிலையில், மாலையில் அருமநல்லூாில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டியிருந்த அரசு பஸ்சை, புத்தோி மேம்பாலத்தில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம ஆசாமி ஒருவர், பா.ஜ.க கொடியைக் காட்டி பஸ்சை நிறுத்த முயன்றாா்.

அப்போது பஸ் டிரைவா் பஸ்சை நிறுத்தாததால் அந்த மா்ம ஆசாமி கையில் இருந்த கற்களை பஸ்சின் முன் கண்ணாடியில் வீசி தாக்கினாா். இதில் கண்ணாடி முழுவதும் உடைந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டமாக இருந்தும் யாரும் காயம் அடையவில்லை. மேலும் அந்த ஆசாமி கையில் இருந்த பா.ஜ.க கொடியை பஸ்சின் அருகில் மடக்கி எறிந்து தப்பிச் சென்றாா்.

 

bjp incident in nagerkoil


சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா் பா.ஜ.க கொடியைக் கைப்பற்றி, பஸ்சை உடைத்த ஆசாமியைத் தேடிவருகின்றனா். பஸ்சை உடைத்தது பாஜகவை சோ்ந்தவரா? அல்லது பா.ஜ.கவினா் மீது பழிபோட வேறு யாராவது பாஜக கொடியைக் காட்டி பஸ்சை உடைத்தாா்களா? என்ற கோணத்தில் விசாாித்து வருகின்றனா். இதில், பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜன் பஸ்சை பாஜகவினா் யாரும் உடைக்கவில்லை என்றும் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த நபா்கள் தான் உடைத்து இருக்கிறாா்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளாா். 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.