சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயைக் கடந்துள்ளது. பெட்ரோல் விலையுயர்வால்மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம்குறித்தஅச்ச உணர்வு அதுவும், இந்தக் கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளதுஎன்றும் கூறலாம்.
இந்நிலையில் திருப்பூரில்செய்தியாளர்களைச் சந்தித்தபாஜகமூத்த தலைவர் இல.கணேசன், பெட்ரோல்டீசல்விலையுயர்வு குறித்த கேள்விக்கு, ''காங்கிரஸ் ஆட்சி விட்டுச்சென்றகடனைஅடைக்கமக்களிடம்வரி வசூல் செய்ய வேண்டிய சூழல்இருக்கிறது'' எனக் கூறினார்.