மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடையாறு கிரவுன் பிளாசாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, பியூஷ் கோயல், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவுக்கு 8தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன என்றும், பாஜகவுக்கு 5இடங்களூம், அதன் தோழமை கட்சிகளான ஐஜேகே -1, புதிய தமிழகம் -1, புதிய நீதிக்கட்சி -1, என 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளன என்றும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டவுள்ளன என்றும் தகவல்.