பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகியும் இந்து மக்கள் கட்சியைச்சேர்ந்த நிர்வாகியும் அரைகுறை ஆடையுடன் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் கொடூரமாகத்தாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக தலைவர் திருமங்கலம் ரவி என்பவரின் ஆதரவாளர் ஒருவரும், இந்து மக்கள் கட்சித்தலைவர் ஈஸ்வரன் என்பவரின் ஆதரவாளர் ஒருவரும் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே மோதிக்கொண்டனர். அரைகுறை ஆடையுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒருவரை ஒருவர்மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.