j

Advertisment

தமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (05.05.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு மாநில முதல்வர் மம்தாதான் பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தில் தொடர்ச்சியாக பயங்கரவாத செயலில் மம்தா அரசு ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாஜகவை நுழையவிடக்கூடாது என்று பலரும் கூச்சலிட்டனர். ஆனால் தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது. சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்கள் சென்றுவிட்டார்கள்" என்றார்.