Advertisment

bjp h raja press meet at madurai

பா.ஜ.க. இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்று ஹெச். ராஜா கூறியுள்ளார்.

Advertisment

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, "எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும். அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது; தோழமை சுட்டுதலோடு குறைகளைச் சொல்கிறேன். பா.ஜ.க. இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. எங்களுடைய வீச்சு நாடு முழுவதும் இருப்பதைப்போல தமிழகத்தில் தேர்தல் தயாரிப்புகள் இருக்கும். நாடு முழுவதும் இருப்பதைப்போல தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் நடவடிக்கை இருக்கும். நிதியமைச்சர் நிர்மலாவை விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மன்னிப்பு கேட்க வேண்டும்". இவ்வாறு அவர் பேசினார்.