
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 37,776 லிருந்து 39,980 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,223 லிருந்து 1,301 ஆக வும் உயர்ந்துள்ளது. இதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 10,018 லிருந்து 10,633 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சீனாவில் ஏற்பட்ட கரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவை விட 3 மடங்கு மக்கள் தொகை உள்ள இந்தியாவில் பிரதமரின் கடும் முயற்சியால் நோய் பரவவில்லை என தெரிவித்துள்ளார்.