Skip to main content

மதக்கலவரங்களை தூண்டுபவர்களை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம்.....

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
tamilisai


சபரிமலை விவகாரத்தில் மத கலவரங்களை தூண்டும் வகையில் செயல்படுவர்களை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

”சென்னை, திருச்சி, கோவை ஆகிய மண்டலங்களில் பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் தினம்; ஆளுநர் தமிழிசை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி வாழ்த்து 

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

 Women's Day; Greetings from Governor Tamilisai AAMUK General Secretary TTV

 

சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் தினம் குறித்து வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது, “மகளிர் அனைவரும் ஏதோ ஒரு தினத்தில் கொண்டாடிவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடினேன் என சொல்லாமல் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது மகளிர் கையில் தான் உள்ளது. எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. யாரும் எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என சில பெண்கள் சொல்கிறார்கள். நமக்கு யாரும் கொடுக்க வேண்டியது இல்லை. நம் சுதந்திரத்தை நாமே எடுத்துக்கொள்ள வேண்டியது தான். பெண்கள் தங்கள் தகுதி, துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனது மகிழ்ச்சியை பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக குடும்பத்தை விடுத்து முன்னேற வேண்டும் என்பது இல்லை.  குடும்ப கட்டமைப்புடன் சேர்ந்த வளர்ச்சி தான் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. அதனால் அனைவரும் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள். மகளிர் தினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல் தினம் தினம் மகளிர் தினமாக கொண்டாடி வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற ஜெயலலிதா மகளிருக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதை இந்நாளில் நினைவு கூர்கிறேன். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அடித்தளமிட்டவர் ஜெயலலிதா. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கி பெண்களை அதிகாரமிக்கவர்களாக, அரசியல் அறிந்தவர்களாக மாற்றுவதற்கான தொடக்கத்துக்கு அடித்தளமிட்டவரும் அவரே.

 

உலக மகளிர் தினத்தன்றில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே இந்த உலகம் அன்புடனும், அறத்துடன் திகழும் என்பதை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதே நேரத்தில் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த நாளில் உறுதி ஏற்போம். மேலும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார். 

 


 

Next Story

“நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி வரல.. ஆனால்...” - ஆளுநர் தமிழிசை கவலை

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Puducherry Governor Tamilisai Soundararajan tripped and fell down

 

செங்கல்பட்டில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த போது கால் தடுமாறி புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை சுமந்தபடி நேற்று இந்த ராக்கெட்  ஏவப்பட்டது.

 

இந்த ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து 150 சிறிய ரக செயற்கைக்கோள்களை தயாரித்தனர். வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை போன்ற தகவல்களை இந்த செயற்கைக்கோள்கள் மூலம் பெறலாம் எனத் தெரிகிறது. இந்த செயற்கைக்கோள்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக மாணவர்கள் தயாரித்து வந்தனர்.

 

கணினி உதவியுடன் மென்பொருளை செயற்கைக்கோளுடன் வடிவமைத்து ஆய்வு செய்வதே அரசு பள்ளி மாணவர்களின் பணியாகும். இந்த செயற்கைக்கோள்கள் வானில் ஏவப்பட்டதன் மூலம் ஒரு செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்க வேண்டும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

 

இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். அவர் ரெட் கார்பெட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை செல்வதற்காக தமிழிசை காரில் ஏற முயன்றார். அப்போது அவர் தடுக்கி விழுந்தார். உடனே அவர் எழுந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

 

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரிமா சங்கத்தின் மதுரை மண்டல மாநாட்டில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், “நான் கால் இடறி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால், அதை பெரிய செய்தியாக வெளியிட்டதால் என்னிடம் பலரும் நலம் விசாரிக்கிறார்கள்‌. நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது‌‌.‌ ஆனால், நான் விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது” எனத் தெரிவித்தார்.

 

- ஜெர்ரி