கரோனா தாக்கத்தால் இந்தியா முழுக்க மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைத்தாரருக்கும் ஐந்து கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இன்று தி.நகர் ஆயிரம் விளக்கு கிழக்கு மண்டலமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ரேஷன் கடையில் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் அதனை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இவருடன் நடிகர் செந்தில் உடன் இருந்தார்.