தஞ்சையில் அண்ணா சிலை மீது பாஜக மற்றும் திமுக கொடிகள் ஒன்றாக போர்த்தி விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உட்கார்ந்தபடி இருக்கும் வடிவில் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா சிலையின் மீது சில மர்ம நபர்கள் திமுக கட்சி கொடியையும் பாஜக கட்சி கொடியையும் ஒன்றாக இணைத்துஅணிவித்துவிட்டுசென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. காலை இதுகுறித்து தகவலறிந்துஅங்கு வந்த காவல்துறையினர் அண்ணா சிலை மீது இருந்த கொடியைஅகற்றி விட்டு சென்றனர்.
இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.