நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழா வருகிற இன்று மாலை (வியாழக்கிழமை) நடக்கிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நரேந்திரமோடி பதவியேற்பதை முன்னிட்டு தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கப்பட்டன.