




Published on 13/10/2021 | Edited on 13/10/2021
நேற்று (13.10.2021) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து திமுக மீது புகார் மனுவை கொடுத்தார். மாலை நேரம் திடீரென ராஜ்பவனுக்குச் சென்ற அண்ணாமலையுடன், பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். அதன் பின்பு கமலாலயத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர்.