BJP executive who tried to sell idols ... 7 idols recovered ... Four arrested!

கோப்புப்படம்

சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராமநாதபுரம் மாவட்ட பாஜகசிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி எனக்கூறி 5 கோடிக்குச் சிலைகளை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. நடராஜர் சிலை உட்பட 7 சாமி சிலைகளை விற்க முயன்ற இந்த சம்பவத்தில் அந்த பாஜக நிர்வாகி உட்பட4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன், ஆயுதப்படை காவலர் நாக நாகேந்திரன், கருப்பசாமி ஆகியோருடன் சிலையை விற்க முயன்ற பாஜக நிர்வாகி அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கைது செய்யப்பட்ட அலெக்சாண்டரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் சிக்கினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை ராமநாதபுரத்தில் 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.