அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ள நடிகையும், பா.ஜ.க.வின் நிர்வாகியுமான விஜயசாந்தி, விசாரணையை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து, சென்னையில்உள்ள சசிகலாவின் இல்லத்திற்கு சென்ற விஜயசாந்தி, அவரை நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, "சசிகலாவை மரியாதை நிமித்தமாகசந்தித்தேன். இதில் அரசியல் எதுவும் பேசவில்லை. சசிகலா அரசியலில் கஷ்டப்பட்டு வந்தவர்; விரைவில் நல்லது நடக்கும்" எனத் தெரிவித்தார்.
சசிகலா மற்றும் விஜயசாந்தி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.