Advertisment

மது போதையில் பெண் போலீசிடம் அத்துமீறல்; சசிகலா புஷ்பா மகன் மீது வழக்குப் பதிவு

bjp executive sasikala pushbha son pradeep raja case filed police

Advertisment

பாஜக நிர்வாகியான சசிகலா புஷ்பாவின் மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும், பாஜகவின்மாநில துணைத் தலைவருமானசசிகலா புஷ்பாவின்மகன் பிரதீப் ராஜா. இவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விருகம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த சாலையில் போலீசார்இரவு ரோந்துப் பணியில் இருந்துள்ளனர்.அங்குபணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்பிரதீப் ராஜாவந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த பிரதீப் ராஜா தனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது மட்டுமின்றி பெண் காவலரின்கையைப் பிடித்து முறுக்கியதாகச் சொல்லப்படுகிறது. அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இது குறித்து பிரதீப் ராஜா மீது மது போதையில் வாகனம் ஒட்டியதற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் பிரதீப் ராஜா வந்த இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பெண் காவலர் ஒருவரைசசிகலா புஷ்பாவின் மகன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

car police
இதையும் படியுங்கள்
Subscribe