திருச்சி வடக்கு தாரநல்லூரை சேர்ந்தவர்விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சதாசிவம். இவர் இ.பி. ரோட்டில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், திருச்சி மாவட்ட பாஜக எஸ்.டி பிரிவு தலைவராக உள்ளார்.
இருவரும் இ.பி ரோடு வேதாத்திரி நகர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர் சதாசிவத்தை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சதாசிவம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.