
தமிழ் மக்களின்விரோத கட்சிபாஜகஎன முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்விமர்சித்துள்ளார்.
முன்னாள் நித்தியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், ''தமிழ் மக்களின் விரோத கட்சிபாஜக. பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வியைத்தான் சந்திக்கும். அதிமுக சார்பில்அரசு பணத்தில்விளம்பரம் கொடுப்பது தோல்வி பயத்தில்தான். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது போல ஒரு மோசமான நடவடிக்கை எதுவுமில்லை. 12 கோடி பேர் இந்தாண்டில் வேலையை இழந்துள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது. தற்போதைய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன்பட்ஜெட் பற்றி பேசியதைவிட என்னைப்பற்றி பேசியதுதான் அதிகம்'' எனக் கூறியுள்ளார்.
Follow Us