/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3162.jpg)
சிதம்பரம் அருகே கடவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாமல்லன். இவர் மாணவர் பருவ காலம் முதல் திமுகவில் இருந்து வந்தார். இந்த நிலையில், திமுக குமராட்சி ஒன்றிய செயலாளராகவும், குமராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பணியாற்றி குமராட்சி பகுதியில் மட்டுமின்றி சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களிடமும் நன்கு பரிட்சயமானவர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவராக பதவியேற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அவர் வியாழக்கிழமை மதியம் சிதம்பரத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி நாற்காலியில் இருந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)