அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி சொந்தக் கட்சியினரிடமே 9 லட்சம் ரூபாயைமோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்டச்செயலாளராகஇருக்கும் கலையரசன் என்பவர்சிவகாசி மாநகர பாஜக துணைத்தலைவராக உள்ளபாண்டியன் என்பவரிடம்,அவரது மூத்த மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தர 7 லட்சமும்,இளைய மகனுக்கு துறைமுகத்தில் வேலை வாங்கித்தர 2 லட்சமும் என மொத்தம் 9 லட்சரூபாயை வாங்கி உள்ளார்.
ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த பாண்டியன் பணத்தைத்திருப்பித்தரும்படி கலையரசனிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தைத்திருப்பித்தராமல் இழுத்தடித்து உள்ளார். மேலும், விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜகதலைவர் சுரேஷ்குமாரும் இதற்குஉடந்தையாக இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து பாண்டியனை மிரட்டி உள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த பாண்டியன் மாநில பாஜக தலைமையிடம்புகார் அளித்து உள்ளார். இரு தரப்பையும் அழைத்து சமரசம் பேசி 9 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வாங்கி பாண்டியனிடம் கொடுத்து உள்ளனர். காசோலையைவங்கிக்குச் சென்று மாற்றும்போது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்த கலையரசன்போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், பாண்டியனைக் கைது செய்தனர். தலைமறைவாகஉள்ள சுரேஷ்குமாரைபோலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பாஜகவினர் மத்திலும், பொதுமக்கள் மத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)