பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகரைதான் சந்தித்ததாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி பாஜக சார்பில் சமதர்ம எழுச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்தமாநாட்டிற்கான கால்கோள் நடும்விழாவில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கூட்டணிக்காக பா.ஜ.க ஏங்கவில்லை என்றுகுறிப்பிட்டடார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
போலீசாரால் தேடப்பட்டுஎஸ்.வி.சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மைதான். விழாவொன்றில் கலந்துகொண்டபோது அவர் வெளியில் வந்தார். அப்போது அவரை சந்தித்து பேசினேன்.எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலைதானே தவிர, அதுஎன் வேலையல்ல. ஒருவேளை அப்படி நான்தான் பிடிக்கவேண்டும் என்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள் என கிண்டலாக பதிலளித்தார். மேலும்,துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தமிழகத்திற்குவிமோசனம் வேண்டும் என்று நினைக்கிறார். அந்த விமோசனத்திற்காக என்னனென்ன வாய்ப்புகள் உண்டோ அதை அவர் பார்த்துக்கொள்ள முடியும். அதில் தவறு எதுவும் கிடையாது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்காக ஏங்கி கொண்டிருக்கவில்லை. ரஜினியுடன் கூட்டணியா? என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தெரிய வரும்.