Advertisment

ஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு!!

BJP to create corruption: Sanjay Dutt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கர்நாடக மாநிலத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயற்சித்தது எனகாங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “ மத்திய அரசை ஆளும் பா.ஜ.க அல்லாத மாற்று கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரதமர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்டவர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சித்தது. ஆனால் புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக விலை போகவில்லை” என்றார். மேலும் அவர் “ஊழலை உருவாக்குவதே பாஜக தான் என குற்றம் சாற்றினார்.

congress Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe