ஜன. 21-24 தேதியிட்ட நமது நக்கீரன் இதழில் பா.ஜ.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாகக் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். இதற்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் நக்கீரன் இதழை தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர். பா.ஜ.க. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதியில் பா.ஜ.க.வினர், அண்ணாமலை பற்றி நக்கீரன் அவதூறு பரப்புவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும், நக்கீரன் இதழையும் எரித்துள்ளனர்.