Advertisment

முதல்வர் அலுவலகத்திற்குள் பாஜக? ரகசியங்கள் கசியும் அபாயம்! 

BJP in the Chief Minister's office

Advertisment

முதல்வர் அலுவலகத்திலேயே பா.ஜ.க. குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பினாமியாக இருந்தவர்களில் ஒருவர் நீலாங்கரை முனுசாமி. அவர் இப்போது தமிழக பா.ஜ.க.வில் மீனவர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் பரத்குமார்,வேலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்திலேயே உதவி மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த 23 ஆம் தேதி நியமித்திருக்கிறார்கள். செய்தித்துறையில் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையிலேயேஇது அரங்கேறிவிட்டது எனச் சொல்லப்படுகிறது.ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டிய முதல்வர் அலுவலகத்திலேயே பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரின் மகனை பணியில் நியமிக்கலாமா? என்று கோட்டை வட்டாரத்தில் இது தொடர்பான பரபரப்பு பேச்சுகள் எழுந்துள்ளன.

அதேசமயம், இந்த விவகாரம் கொஞ்சம் தாமதமாகத்தான் முதல்வர் கவனத்துக்கு சென்றிருக்கிறது. பரத்குமாரின் பின்னணிகளை அறிந்த முதல்வர், பரத்குமாரின் நியமன உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe