Skip to main content

முதல்வர் அலுவலகத்திற்குள் பாஜக? ரகசியங்கள் கசியும் அபாயம்! 

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

BJP in the Chief Minister's office

 

முதல்வர் அலுவலகத்திலேயே பா.ஜ.க. குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்.

 

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பினாமியாக இருந்தவர்களில் ஒருவர் நீலாங்கரை முனுசாமி. அவர் இப்போது தமிழக பா.ஜ.க.வில் மீனவர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் பரத்குமார், வேலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்திலேயே உதவி மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த 23 ஆம் தேதி நியமித்திருக்கிறார்கள். செய்தித்துறையில் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையிலேயே இது அரங்கேறிவிட்டது எனச் சொல்லப்படுகிறது. ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டிய முதல்வர் அலுவலகத்திலேயே பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரின் மகனை பணியில் நியமிக்கலாமா? என்று கோட்டை வட்டாரத்தில் இது தொடர்பான பரபரப்பு பேச்சுகள் எழுந்துள்ளன. 

 

அதேசமயம், இந்த விவகாரம் கொஞ்சம் தாமதமாகத்தான் முதல்வர் கவனத்துக்கு சென்றிருக்கிறது. பரத்குமாரின் பின்னணிகளை அறிந்த முதல்வர், பரத்குமாரின் நியமன உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 DMK candidate filing nomination on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று (19-06-24) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பிக்கள் ரவிக்குமார் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிடோர் உடன் இருந்தனர். இதனிடையே, இன்று மாலை நேரத்தில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

'என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'- மோடி பேச்சு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
mn

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்''  என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.