BJP Case registered against 100 people including L. Murugan ..!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைஅடுத்த ஆலாங்குப்பத்தில் பா.ஜ.க.வின் அணி, பிரிவு, மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் டிசம்பர் 2ஆம் தேதிநடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் முருகன், கே.டி.ராகவன் உட்படஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிலையில், அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியது, கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 144 தடை உத்தரவை மீறியது, கூட்டம் கூட்டியது என 3 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர போலீஸார் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் ராகவன், மாவட்ட பொறுப்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

டிசம்பர் 3ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அதே டிசம்பர் 3ஆம் தேதி மாலை வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.