jkl

தமிழ்நாட்டில் சில நாட்களாக கொங்கு நாடு தொடர்பான விவாதத்தைப் பாஜகவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பேசிவருகிறார்கள். இதற்கு மற்ற கட்சியினர்கடும் பதிலடிகளைக் கொடுத்துவருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவினருடைய இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறும்போது, "தமிழகத்தில் தற்போது கொங்குநாடு பிரச்சனையைப் பாஜக முன்னெடுத்துள்ளது. பாஜக மட்டுமல்ல யாரும் தமிழகத்தைப் பிரிக்க முடியாது. இத்தகைய எண்ணம் கொண்டவர்களைத் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள். இது பகல் கனவாகத்தான் முடியும்" என்றார்.

Advertisment