Advertisment

வீட்டில் 6 பேர் இருந்தும் ஒரே ஒரு வாக்கை பெற்ற பாஜக வேட்பாளர்!

BJP candidate who got only one vote

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Advertisment

வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278போலீசாரும்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும்சிசிடிவிகேமராக்கள்மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைஅறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படிதிமுக பல இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

Advertisment

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரேயொரு வாக்கை மட்டும் பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. கோவையில் பெரியநாயக்கம்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்தகுருடம்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதேதேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் என்ற வேட்பாளருக்கு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது. கார்த்திக், பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் என்பதும் வேட்பாளர் கார்த்திக் வீட்டில் குடும்ப உறுப்பினர்களே 6 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kovai local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe