Advertisment

“நடிகர் அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது” - அண்ணாமலை 

bjp annamalai talk about varisu and thunivu

பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு படமும், விஜய்நடிப்பில் வாரிசு படமும் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 9 ஆண்டுகள் கழித்து இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகியுள்ளதால், அவர்களது ரசிகர்கள் அதனை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நடிகர் அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. அதேபோல் நடிகர் விஜய் தமது நடிப்பை முதல் படத்திலிருந்து தற்போதைய படம் வரை மிகச் சிறப்பாக மெருகேற்றி உள்ளார். அரசியலில் துணிவாக இருப்பேன்;வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.நேரம் கிடைக்கும்போது சென்று வாரிசையும், துணிவையும் பார்ப்பேன். அஜித்தும், விஜய்யும் ஜென்டில்மேனாக நடந்து கொள்கின்றனர். அந்த அளவுக்கு அவர்களுடைய ரசிகர்களும் ஜென்டில்மேனாக நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisment

Annamalai Thunivu ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe