Advertisment

“100 நாள் வேலைக்கு தடை என்ற சீமான் கருத்தில் நியாயம் உள்ளது” - பாஜக அண்ணாமலை!

ே

சுதந்திர போராட்ட தியாகி குமரனின் 118வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வாழ்ந்த சென்னிமலையில் அவரின் திருவுருவ படத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழக மக்களின் மனநிலை பாஜகவை நோக்கி நகரும். தற்போதையை உள்ளாட்சித் தேர்தலில் நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளோம்.

Advertisment

மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த 6 ஆயிரம் பணத்தில் தமிழகத்தில்தான் அதிகம் ஊழல் நடைபெற்றுவருகிறது. 100 நாள் வேலை திட்டம் பற்றி சீமான் தெரிவித்துள்ள கருத்தில் நியாயம் இருக்கிறது" என்றார். சீமான் நூறு நாள் வேலை திட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்தை எந்தக் கட்சியும் ஆதரிக்காத நிலையில், அவரின் கருத்தை முதல் ஆளாக அண்ணாமலை ஆதரித்துள்ளார். கே.டி. ராகவன் வீடியோ வெளியானபோதும் ‘அவர் செய்ததில் என்ன தவறு இருக்கிறது’ என்று சீமான் ராகவனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe