Advertisment

ஐ.பி.எல். போட்டியில் 'ஒத்த ஓட்டு பாஜக'... டிக்கெட் ஸ்பான்சர் யார்? - பாஜக அண்ணாமலை பேட்டி!

BJP Annamalai interview!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் கடந்த 12/10/2021 அன்றுவெளியாகி, அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் 381பேர் வெற்றிபெற்றுள்ளதாகக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்செய்தியாளர்களைச்சந்தித்த அவர், ''துபாய்க்குச் சென்று அங்குஐ.பி.எல். நடக்கும்போது, யார் அந்தடிக்கெட்டை ஸ்பான்சர் செய்தார்கள் என்பதை எல்லாம் தாண்டி, அங்குகையில் ஒருபேப்பரைஎடுத்து 'ஒத்த ஓட்டு பாஜக' என்று எழுதி தொலைக்காட்சியில் காட்டுகிறார் ஒருவர். அதை எல்லாம் தாண்டி,அந்த ஒத்த ஓட்டை யார் வாங்கினாரோஅதற்கான காரணத்தையும் சொன்னால்,தாமரை சின்னத்தில் அவருடைய உழைப்பு இருந்தால், அவருக்கும் கூடவெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கொடுக்கின்ற கட்சியாக பாஜக இருக்கும். வார்டுமெம்பர்தேர்தலில் 381 பேர்வெற்றி பெற்றுள்ளனர். கட்சியின் சார்பாக அவர்களுக்குவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.

local body election Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe