Annamalai congratulates Chief Minister for praying to God!

தமிழ்நாட்டு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலின் இருவரது நினைவிடங்களிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Advertisment

இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்” என்று அந்த ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment