குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கானமுன்னெடுப்புகளைகுடியரசுத்தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரானயஷ்வந்த்சின்ஹாநேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதிமுர்முஇன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதிமுர்முநுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக்கட்சிதலைவர்களைச் சந்தித்தார்.
அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரௌபதிமுர்முவைசந்தித்துஆதரவுதெரிவித்தனர்.