Advertisment

மாப்பிள்ளை நான்தான் சட்டை உன்னுடையது... பாஜக அதிமுகவிடம் கொடுத்த கணக்கு

implementing AIADMK

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி என்பது ஏறக்குறைய இறுதி வடிவம் பெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவினுடைய சீனியரான மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் வருகிற தேர்தலில் தமிழ்நாட்டில் 30 இடங்களை கைப்பற்றுவோம் என கூறியிருக்கிறார். அதேபோல் அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் அதிகமான தொகுதிகளை வெல்வோம் என அறிவித்துள்ளார்.

Advertisment

இவர்களின் பேச்சுக்கு பின்னால் மிகப்பெரிய திட்டமே இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவின் சீனியர்கள். அது என்ன திட்டம் என்றால், ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது என்பதுதான் அத்திட்டத்தின் மூலமாக உள்ளது. அப்படியெனில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 60 கோடி ரூபாய் என்றும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் என்று இந்த கணக்கில் ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு 60 கோடி ரூபாய் செலவிடப்படுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாக்குவது என்பது அதிமுகவுக்கு கை வந்த கலை. ஆனால் தேசிய கட்சியான பாஜக அந்த திட்டத்தில் நேரடியாக இறங்க முடியாது என்றும், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, அந்த நெட்வொர்க்கை வேலை வாங்குவது என அனைத்தும் அதிமுக வசமே இருக்கும். பாஜக போட்டியிடுகிற தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத் வாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிமுகவின் வேலைதான். மாப்பிள்ளை நான்தான் சட்டை உன்னுடையது என்று சொல்வதுபோலதேர்தலுக்கு முன்பே வித்தியாசமாக சிந்தித்து செயல்பட தொடங்கிவிட்டனர்.

plan Alliance elections parliment aiadmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe