modi-eps

Advertisment

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுகவோடு கூட்டணி சேருவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை பாஜக தொடங்கியுள்ளது.

இதற்காக அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்த சந்திப்பு அதிமுக பாஜக அணியை உறுதிப்படுத்துமா என்று பாஜக வட்டாரத்தில் கேட்டதற்கு, பாஜகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்குமாறும், எந்தெந்த தொகுதிகள் என்றும் அதிமுகவிடம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதுசம்மந்தமாக பேசுவதற்காகத்தான் அமைச்சர்கள் டெல்லி சென்றதாக கூறினர்.

Advertisment

ஆனால் அதிமுகவில் உள்ள அணிகள் இணையாமல் அதிமுக - பாஜக கூட்டணி என்ற பேச்சுவார்தத்தை முடிவுக்கு வராது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.