BJP administrator misbehaved with young woman

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க. மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஊரியில் உள்ள ஒரு தோட்டத்தில் வெண்டைக்காய் பறிப்பதற்காக அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

Advertisment

தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற பெண்ணிற்கு பாஜக நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.