நடிகை கவுதமி இன்று தமிழக பாஜக அலுவலகம் வந்தார். இதையடுத்து அங்கே செய்தியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவுதமி, ‘’உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துவரும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன்’’என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருப்பதாகவும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் உறுப்பினர் அட்டை பெற்று பாஜகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். எந்தப்பதவியும் இல்லாமல் பாஜகவில் அரசியல் பயணம் தொடரும்’’என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.