Advertisment

குமரியில் பாஜக நிர்வாகிக்கு கத்திகுத்து

குமரி மாவட்டம் தக்கலை ஒன்றிய பா.ஜக தலைவராக இருந்து வருகிறார் மனோகர குமார். மேலகல்குறிச்சியில் அவரின் வீட்டு அருகில் நின்று கொண்டிருந்த போது அங்கு வாடகைக்கு இருக்கும் ரவுடி ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒருவருடன் தகராறு செய்து கொண்டு அவரை தாக்க முயன்றார். அப்போது அவர் உயிருக்கு பயந்து அங்கு நின்று கொண்டியிருந்த மனோகர குமாரிடம் அடைக்கலத்துக்கு ஒடி வந்துள்ளார்.

Advertisment

க்

உடனே ரவுடி ராதாகிருஷ்ணனும் அவரை துரத்தி கொண்டு மனோகர குமாரிடம் வந்துள்ளார். பின்னர் ரவுடி ராதாகிருஷ்ணன் கத்தியை எடுத்து அவரை குத்த முயன்ற போது மனோகர குமார் ராதாகிருஷ்ணனை தடுத்துள்ளார். இதில் ஆத்திமடைந்த ரவுடி ராதாகிரு~;ணன் என்னை தடுக்கிறாய என கூறி மனோகர குமாரின் கையில் இரண்டு இடத்தில் கத்தியால் குத்தி உள்ளான். இதில் காயமடைந்த மனோகர குமார் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதுகுறித்து தக்கலை போலிசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ராதாகிரு~;ணனை கைது செய்தனர். ரவுடி ராதாகிரு~;ணன் மீது குளச்சலில் மனைவியை கொலை செய்த வழக்கு மற்றும் போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய வழக்கு உட்பட 5 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe