Skip to main content

பா.ஜ.க. அரசுக்கு எதிராக வலுவாகும் மருத்துவர்கள் போராட்டம்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

மத்திய பா.ஜ.க. மோடி அரசு கல்வியிலிருந்து கைத்தறி தொழில் வரை என பொதுமக்கள் நேரடியாக பயன் பெரும் அல்லது பங்கு பெறும் அமைப்புகள் அனைத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் "தேசிய மருத்துவ  ஆணையம்" இது அமைக்கப்பட்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டன குரல்கள் இந்திய டாக்டர்களிடம் எதிரொளித்து வருகிறது. 

 

h

 

இதை எதிர்த்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஏற்கனவே மத்திய அரசின் நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தை கலைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு  எதிர்த்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்களுக்கும் எதிராக அமைக்கப்பட உள்ள  தேசிய மருத்துவ ஆணையத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.  அதன் அடிப்படையில் இன்று இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் 24 மணி நேரம்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 

 

h

 

ஈரோடு மாவட்டத்திலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்பாட்டம் நடந்தது.   ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள்,  கிளினிக்குகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 

 

இன்று புற நோயாளிகளுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.  இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் வேதனையுடனும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.  ஆனால் அவசர கால சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கின.  இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்  ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

 

தனியார் ஆஸ்பத்திரியில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் கோபி அந்தியூர் சத்தியமங்கலம் மொடக்குறிச்சி, சிவகிரி, சென்னிமலை, கவுந்தப்பாடி பவானி பெருந்துறை என மாவட்டம் முழுக்க உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை இன்றி பெரும் அவதியுற்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு; சிவகாசி மருத்துவர்கள் நல்கிய உடலுழைப்பு!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இந்த உலகம் எதனால் யாரால் வாழ்கிறது என்றால், தனக்கென வாழாது பிறருக்கென வாழும் ஒரு சிலரால்தான் என மூதோர் கூறியுள்ளனர். தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்தலே பிறப்பின் இன்பம் என்பதை அவ்வப்போது யாரோ செய்யும் சேவைகளின் மூலம் பார்த்திருப்போம். சிவகாசியிலும் அப்படியொரு சேவையில் பல மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், அது மருத்துவ சேவையல்ல. சேற்றிலும் சகதியிலும் இறங்கி இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக உடலுழைப்பை நல்கிய சேவை அது.  

 

சிவகாசி பெரியகுளம் கண்மாயின் வடமேற்கு கரையில், கழிவுநீர் தேக்கக்குட்டை கரையில், மியாவாக்கி முறையில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, சிவகாசி மருத்துவர்கள் அனைவரது பங்களிப்போடு நடந்தது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் மருத்துவர்கள், ஆர்வத்துடன் மரக்கன்றுகளை  நடவு செய்து வியப்பில் ஆழ்த்தினர்.   

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இச்சேவையில் டாக்டர்களான சுப்புராஜ், ரகுநாதன், கதிரவன், பாலசுப்பிரமணியன், சோலைக்குமார், ரத்தினம், சண்முகராஜ், ராஜேஷ் தர்க்கர், மணிகண்டன், பரத், சுதா மற்றும் பல பெண் மருத்துவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர்.  பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளின்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். சிவகாசி மருத்துவர்களோ, பெரிய அளவில் பணியாளர்களே இல்லாமல் தாங்களே பணியாளர்களாக மாறி செயல்பட்டனர். நமது சமுதாயத்தில் சமூக சேவையின் அவசியம் பலவழிகளிலும் வலியுறுத்தப்படுகிறது. 

 

மியாவாக்கி: நகரங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் அல்லது வீடுகளின் பின்புறங்களில் உள்ளூர் மரங்களையும் அவற்றின் விதைகளையும் கொண்டு குறுங்காடுகளை உருவாக்குவதே மியாவாக்கி முறையாகும். குறைந்த அளவுள்ள இடத்தில் அதிக மரங்களை நடுவதன் மூலம், சூரிய ஒளியைத் தேடி அவை உயரமாக வளரும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.

 

 

Next Story

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறிய மருத்துவர்கள்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Negligence in Erode Government Hospital

 

ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 75. டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மினி.இவர்களுக்கு இரண்டு மகன் உள்ள நிலையில் மனைவி பத்மினி, மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் ராஜசேகருக்கு, கடந்த 12 ஆம் தேதி மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

 

இதையடுத்து உறவினர்கள் ராஜசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு தலைமை மருத்துவமனையில் ராஜசேகரை பிரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் அவரை ஐ.சி.யூவில் சிகிச்சைக்காக அட்மிட் செய்து சிகிச்சை பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம்(14.10.2023) மருத்துவமனை தரப்பில் இருந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ராஜசேகர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் பிணவறையில் இருக்கும் என்றும் கூறி உள்ளனர். மேலும் அதனை உறவினர்களிடம் தெரிவிக்கும் படியும் கூறி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறை மூலம் உறவினர்களுக்கு இது குறித்து தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜசேகரன் உடலைப் பெற அமரர் ஊர்தி எடுத்துக்க கொண்டு நேற்று(15.10.2023) அரசு தலைமை மருத்துவமனையின் பிணஅறைக்கு வந்தனர். அப்போது பிணவறையில் சென்று பார்த்த பொழுது ராஜசேகர் பெயரில் எந்த உடலும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர். அதன் பின் மருத்துவமனை நிர்வாகித்திடம் கேட்டபோது, ராஜசேகர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் யாராவது தெரியாமல் கூறி இருப்பார்கள் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளனர்.

 

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் எப்படி இது போன்று கூறலாம் என்று முதலில் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ராஜசேகருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையைப் பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அரசு மருத்துவமனையை நம்பி ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் நிலையில், இது போன்று ஒரு சில மருத்துவர்கள் செய்கின்ற சம்பவங்கள், பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உயிருடன் சிகிச்சை பெற்று வருபவரை இறந்து விட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.