Skip to main content

பாஜகவின் அடுத்த குறி ரிசர்வ் பேங்க் ?

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

 

arjun jetli

 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டக்குழுவில் தொடங்கி சிபிஐ வரை பல்வேறு அமைப்புகளை தொடர்ச்சியாக மாற்றி அமைத்து வருகிறது. இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக விமர்சனங்களை வைத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் பாஜக அரசு இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். 

 

பாஜக அரசுக்கு  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிற்கும் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் சில தினங்களாக வெளியாகி வருகிறது.  இந்த நிலையில் இதற்கு காரணம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா பேச்சு என்பதாக சொல்லப்படுகிறது. அவர் தனது பேச்சில் " மத்திய அரசின் நெருக்கடிக்கும் உட்பட்டு செயல்பட்டு வருகிறோம்.    ஆர்.பி.ஐ-யின் சுதந்திரத்தையும் ,சுயாட்சியையும் மத்திய அரசு மதிக்கவில்லை என்ற பேச்சின் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. இந்த சுயாட்சி அமைப்பை சீர்குலைத்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்று பேசி இருக்கிறார்.  துணை கவர்னரின் இந்த பேச்சுக்கு காரணம் ,ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவை தங்களின் கட்டுப்பாட்டுக்குள்  பிரிவு 7-ஐ கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும்  மத்திய அரசு செய்து இருக்கிறது. 

 

பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி , பொதுத்துறை நிறுவனங்களில் வரலாற்றில் இல்லாத வாராக்கடன் என்று மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.  இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த உர்ஜித் பட்டேலை ஆர்.பி.ஐ கவர்னராக கொண்டு வந்தால் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று பாஜக அரசு நினைத்தது. ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் பொருளாதார ரீதியாக தங்களுக்கு ஏற்றார் போல கொள்கைகளை மாற்றி அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள முயற்சித்தது.  ஆனால் உர்ஜித் பட்டேல் அனுமதிக்காததால் இந்த மோதல் முற்றியிருக்கிறது.  அதே நிலையில் ஆர் பி ஐ கவர்னர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்று காலை ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. 

 


அதன் பின்னர் மத்திய நிலைமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியானது " நாட்டு மக்களின் நலன் கருது சிலவற்றை மாற்றி அமைக்க ஆலோசனை செய்யப்பட்டது. ஆர் பி ஐ சுயாட்சியாக முடிவுகள் எடுப்பதில்  மத்திய அரசு தலையிடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது" . ஆனால் பிரிவு 7 ஐ அமல்படுத்துவது குறித்து எந்த ஒரு விவரமும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிதி அமைச்சகம் பதிவிட்ட ட்வீட்…

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

Tweet posted by the Ministry of Finance

 

 

மறைந்த முன்னாள்  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறைந்து நேற்றுடன் ஒரு வருடமானது. அவரை நினைவுக் கூறும் வகையில் நேற்று மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் கணக்கில் ஜி.எஸ்.டி. தொடர்பாகவும் அதில் அருண் ஜெட்லி பங்களிப்பையும் கொண்டு ஒரு பதிவை பதிவிட்டிருந்தது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது,

 ஜி.எஸ்.டி. வரியானது இந்திய வரிவிதிப்பு வரலாற்றில் கொண்டுவரப்பட்ட அடிப்படையான மற்றும் முக்கியமான மைல்கல்.

 

ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டுவருவதற்கு முன் இந்தியாவில் வாட் எனப்படும் ஒருங்கிணைந்த மதிப்பு கூட்டு வரி, கலால் வரி, மத்திய விற்பனை வரி என 31% அதிகமாக இருந்தது. முன்னதாக இந்திய மாநிலங்கள் தனி தனியே வெவ்வேறு அளவிட்டான வரிகளை விதித்து வந்தமையால் பல பிரச்சனைகள் இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததால் நாட்டின் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.24 கோடி என இரட்டிப்பாகியுள்ளது. ஜி.எஸ்.டி. மக்களின் வரி சுமையை குறைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவித்திப்பு முறைக்கு முன் இருந்த வரி விதிப்பு முறையில் அதிகப்படியான வரி கட்டவேண்டிருந்தது. அதனால் மக்கள் அதிகம் வரி கட்டாமல் இருந்தனர். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நுகர்வோர் மற்றும் வரி கட்டுவோர் என இருத்தரப்பினருக்கும் இணக்கமாக உள்ளதனால் அதிகப்படியான வரி வசுலாகிறது என்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை கொண்டுவருவதற்கு முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எவ்வளவு முயன்றார் என்றும் அதற்கான சீரிய பணிகளை செய்தார் என்பதையும் நாம் அவரின் இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

பா.ஜ.க.வுக்கு தொடரும் இழப்பு!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

முன்னாள் நிதியமைச்சரும் "ஜென்டில்மேன்' இமேஜ் கொண்டவருமான அருண்ஜெட்லி கடந்த ஆகஸ்டு 24-ஆம் தேதி மரணமடைந்தார். தனிப்பட்ட முறையில் இந்திய உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் ஆவார். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும்போதே அருண்ஜெட்லிக்கு சிறுநீரகக் கோளாறு, திசுப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்க சிகிச்சை, ஓய்வு என காலம்தள்ளி வந்த அவர், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார். 
 

bjp



தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர், நிதியமைச்சர், கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் என பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்புகள் பல வகித்தவர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.விடமும், தற்போது சி.பி.ஐ.யால் வேட்டையாடப்படும் காங்கிரஸ் பெருந்தலையான ப.சிதம்பரத்திடமும் கட்சி தாண்டிய நட்பைப் பேணியவர். ஏற்கெனவே மனோகர் சிங் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ் என ஆளுமைகளை இழந்து தவிக்கும் பா.ஜ.க.வுக்கு இது மற்றுமொரு பேரிழப்பாகும்.