Advertisment

தீரன் சின்னமலை பிறந்த நாள்; தலைவர்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள்(ஏப்.17) விழாவினை ஒட்டி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சாமிநாதன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு,அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாமக கட்சியின் சார்பில் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி, கொங்கு வேளாளர் கட்சியின் சார்பில், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.

Advertisment

Edappadi Palanisamy Theeran Chinnamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe