Advertisment

காதலிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ; பறிபோன மூன்று உயிர்கள்

Birthday gift for girlfriend;  Three lives lost

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது குறிச்சிக்கோட்டை. அப்பகுதியில் உள்ள மானுப்பட்டி என்ற இடத்தில் சாலையோரத்திலேயே அமைந்திருக்கும் குட்டையில் சடலங்கள் மூன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் அறிந்து அங்கு சென்ற போலீசார் குட்டையில் மிதந்த ஒரு பெண், இரு ஆண்கள் என மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

குட்டையில் மேலும் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது தொடர்பாக தேடுதல் நடத்திய பொழுது அதில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். அதேபோல அந்த பகுதியில் உள்ள மக்கள், இளைஞர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisment

விசாரணையில் குட்டையில் உயிரிழந்த மூன்று பேரில் குறிச்சிகோட்டையைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் இருந்தது தெரியவந்தது. அதேபோல அந்த மாணவினுடைய தாய்மாமன் மாரிமுத்துவும், சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரும் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வேளச்சேரியைச் சேர்ந்த ஆகாஷுக்கும் குறிச்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அந்த பதினோராம் வகுப்பு மாணவிக்கும் இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டால் பக்கத்தின் மூலம் நட்பு உருவாகியுள்ளது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவி, ஆகாஷுக்கு தன்னுடைய தாய் மாமா மாரிமுத்துவை நட்பாக்கியுள்ளார்.

இப்படி இருக்க கடந்த பதினெட்டாம் தேதி மாணவிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதற்காக பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும் என சர்ப்ரைஸாக திட்டமிட்ட ஆகாஷ் 17 ஆம் தேதி இருசக்கர வாகனத்திலேயே சென்னையில் இருந்து குறிச்சி கோட்டை வந்துள்ளார். உடன் ஜீவானந்தம் என்ற நண்பனையும் அழைத்து வந்ததாகத்தெரிகிறது. ஆகாஷும் ஜீவானந்தமும் சபரிமலைக்கு மாலை அணிவித்து இருந்த நிலையில் குறிச்சிக்கோட்டை வந்த ஆகாஷ் தன்னுடைய பைக்கில் மாணவியும், மாணவியின் தாய்மாமா மாரிமுத்து பைக்கில் ஜீவானந்தமும் பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

பழனி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அடுத்த நாள் 18ஆம் தேதி காதலிக்கு பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸ்கிஃப்ட் கொடுக்க ஆகாஷ் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென 17ஆம் தேதி மாலையை ஐயப்பன் சாமிக்கு அணிந்திருந்த மாலையை கழட்டி வைத்த ஆகாஷ், மாரிமுத்து உடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட ஆகாஷ், ''உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் தர ஆசைப்படுகிறேன் வா'' என அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மது போதையில் மாரிமுத்து இருசக்கர வாகனத்தை ஓட்ட, ஆகாஷும் மாணவியும் பின்னே அமர்ந்திருந்தனர். அப்பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குட்டையில் பாய்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரவு நேரம் என்பதாலும் அந்த குட்டை சேறும் சகதியுமாக இருந்தாலும் உள்ளே சிக்கிய மூவரும் வெளியே வர முடியாமல் உள்ளேயே மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் உடல்கள் அழுகியதால் வெளியில் தென்பட்ட உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

thirupur udumalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe