Advertisment

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் அன்னதானம்!

தமிழ் சினிமாவின், ஏன் தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என திரையுலகால் கொண்டாடப்படுபவர் தியகராஜ பாகவதர். மயிலாடுதுறையில் 1910 மார்ச் 1ந்தேதி பிறந்து மேடைநாடகங்களில் நடித்துவந்தார் தியாகராஜ பாகவதர். அவரின் குரல் வளம் நாடக ஆசிரியர்களுக்கு பிடித்திருந்தது, அவர்கள் தந்த ஊக்கத்தால் கர்நாடக இசையை கற்றுக்கொண்டவர். நாடக உலகில் கொடிக்கட்டி பறந்தார்.

Advertisment

 Birthday of the first super star of Tamil Nadu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேடை நாடக கலைஞரான இவர் பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் திரை நாயகனாக படத்தில் நடிக்க தொடங்கினார். இவர் மொத்தமே 15 திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். ஆனால் அதில் 6 படங்கள் பெரிய வெற்றிப்படங்கள். அதிலும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹரிதாஸ் என்கிற திரைப்படம் பாடல்களால் நிரம்பியது என்றாலும், அக்கால ரசிகர்களால் பெரிதும் வரவேற்பு பெற்று திரையரங்குகளில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

 Birthday of the first super star of Tamil Nadu

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையான பாகவதர், சொந்தமாக தயாரித்த படங்கள் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தியதால் பின்னர் குடிநோய்க்கு அடிமையாகி 1959 நவம்பர் 1ல் காலமானார்.

 Birthday of the first super star of Tamil Nadu

அவரின் 110வது ஆண்டு பிறந்தநாளை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதி விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த அமைப்பு ஒன்று கொண்டாடியது. இதில் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கடேசன் கலந்துக்கொண்டு, தியாகராஜ பாகவதர் குறித்து பேசியவர், அங்கு வந்துயிருந்த நூற்றுக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

tamil cinema cinema thiyagarajar temple super star
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe