publive-image

Advertisment

மகாத்மா காந்தியின் 153- வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் , மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், நாட்டு மக்களுக்கு காந்தியின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர். அத்தனை வன்முறைகளும் அஞ்சும் அகிம்சையை அறிவித்த ஆற்றலாளர் காந்திக்கு இன்று பிறந்தநாள். ஒரு சகாப்தம் ஜனித்த நாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.