இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் அலுவலகத்தில் டாக்டர்திரு அப்துல் கலாம் ஐயா அவர்களது 89வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர்திருமதி மூ.ராஜேஸ்வரி பிரியா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியினர், நேர்மையின் அடையாளமாக விளங்கிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக என்றென்றும் விளங்குவார். அப்துல் கலாம் ஐயா அவர்களது பாதையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தன் அரசியல் பயணத்தை நேர்மையாகவும் சுயநலம் இல்லாமலும் மக்களுக்காக என்றென்றும் செயல்படும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.