/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_741.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார் கோவில் தெருவில் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள். இதன் காரணமாக சுமார்20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேக் வாங்கி வந்துநடுரோட்டில் நின்று கொண்டு சைக்கிள் மீது கேக் வைத்து அதனை வெட்டி அலப்பறையில் ஈடுபட்டனர்.
தங்களது புத்தகப் பைகளை ஒரு வீட்டின் கேட்டின் மீது மாட்டிவிட்டு பிறந்தநாளைக்கொண்டாடியுள்ளனர். இவர்களின் சத்தத்தால் அக்கம்பக்க வீட்டினருக்குத் தொந்தரவாகி,அதே பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்பள்ளி நிர்வாகத்திற்கு தொலைப்பேசியில் அழைத்து, உங்களுடைய மாணவர்கள் தினந்தோறும் இப்பகுதியில் தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியுள்ளார். அதன் காரணமாக மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)